இந்தியா

கரோனா தொற்றிலிருந்து விடுபட்டார் ஒமர் அப்துல்லா

27th Apr 2021 11:50 AM

ADVERTISEMENT

 

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார். 

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 

ADVERTISEMENT

மூக்கடைப்பைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை என்பது எனது அதிர்ஷ்டம். 

கடந்த 18 நாள்களுக்கு பின்பு இன்று சோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. நிறையப் பேர் என்னைப் போன்று அதிர்ஷ்டசாலிகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். விரைவில் குணமடைந்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT