இந்தியா

ஒடிசாவில் மேலும் 6,073 பேருக்கு கரோனா பாதிப்பு 

27th Apr 2021 12:14 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,073 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் ஒரேநாளில் 6,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4,20,129 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

அதே நேரத்தில் 10 பேர் கரோனா பாதித்து இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் 2,007 ஆக உயர்ந்துள்ளன. 

தொற்று பாதித்து 50,958 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 3,522 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், மீதமுள்ளவர்கள் உள்ளூரிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநில தலைநகரான புவனேஸ்வர் ஒரு பகுதியாக இருக்கும் குர்தா மாவட்டம், அதிகபட்சமாக 1,092 கரோனா வழக்குகளும், பொலங்கிர் 457 ஆகவும், நூபாடா 400 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதுவரை மாநிலத்தில் 99.54 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதேசமயம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT