இந்தியா

ஆம்புலன்ஸ் இல்லை; இறந்த பெண்ணின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்!

27th Apr 2021 04:23 PM

ADVERTISEMENT

 

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த ஒரு பெண்ணின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம் ஆந்திரத்தில் நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லேசான கரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து அவர் கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்து சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தார். எனினும் முடிவுகள் வரும் முன்பே உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 

பின்னர் மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக உயிரிழந்த பெண்ணின் மகன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தாயின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Andhra
ADVERTISEMENT
ADVERTISEMENT