இந்தியா

ஆசிரியர்களை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த இமாச்சல் அரசு முடிவு

27th Apr 2021 07:35 PM

ADVERTISEMENT

ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த இமாச்சல் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இமாச்சல் மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களை கரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக உயர்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனரகத்திற்கு மாநில அரசு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இமாச்சலில் இதுவரை 89 ஆயிரத்து 193 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT