கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
கரோனா பணியில் ஈடுபடுவதற்காக 51 முன்னாள் ராணுவ வீரர்கள் தற்காலிக சுகாதாரத் துறை பணியாளர்களாக நியமிக்கவுள்ளனர். இந்தத் தகவலை மத்திய பாதுகாப்புத் துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய பாதுகாப்புத் துறையுன் கரோனா பரவலுக்கு எதிரான போரில் மாநில சுகாதாரத் துறைக்கு உதவி வருகிறது.
பாதுகாப்புத் துறையினருக்கான மருத்துவமனையை கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறை வாகனங்கள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு விரைவாக ஆக்ஸிஜன் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதாரப் பணியில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக ஓய்வு பெற்ற 51 வீரர்களை தற்காலிக சுகாதாரத் துறை ஊழியர்களாக நியமனம் செய்யவுள்ளது.