இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் கருணா சுக்லா கரோனாவுக்கு பலி

27th Apr 2021 11:34 AM

ADVERTISEMENT

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணா சுக்லா கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராய்ப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா கேர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகள் சுக்லா, கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது. 

கடந்த 2013ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

ADVERTISEMENT

2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜகவின் லகான் லால் சாஹுவால் தோற்கடிக்கப்பட்டார்.

பலோதபஜாரில் கருணா சுக்லாவின் இறுதிச்சடங்கு  நடைபெறுகின்றன. இவரது மறைவிற்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT