தில்லியில் கிட்டத்தட்ட அனைத்து ஐசியு படுக்கைகளும் நிரம்பியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கரோனா மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கேஜரிவால் பேசியதாவது, தில்லியில் அனைத்து ஐசியு படுக்கைகளும் நிரம்பியுள்ளன. ராம்லீலா மைதானம் மற்றும் ஜிடிபி மருத்துவமனையிலுள்ள ஐசியு படுக்கைகளும், ராதா சோமி வளாகத்திலுள்ள 200 ஐசியு படுக்கைகளும் நிரம்பியுள்ளன. எனினும் வரும் 10-ம் தேதிக்குள் 1,200 கரோனா படுக்கைகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.
மேலும், கடந்த 4 முதல் 5 நாள்களாக நாட்டின் பெரும்பாலான நிறுவனத்திடம் உதவிகோரி கடிதம் எழுதியுள்ளேன். மிகப்பெரிய உதவிகளைத் தற்போது பெற்று வருகிறோம். அதிக அளவிலான மக்களிடமிருந்து உதவிகள் வருகின்றன. தில்லி அரசுக்கு உதவும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.