இந்தியா

மேற்கு வங்கத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

26th Apr 2021 08:06 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான ஏழாம் கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கியது. இதில், முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த 2016 தோ்தலில் வெற்றி பெற்ற பவானிபூா் உள்பட 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 284 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தோ்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 86,78,221 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனா். இந்த தொகுதிகளில் மொத்தம் 284 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்த தோ்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொத்தம் 86,78,221 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனா். அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 796 கம்பெனி வீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். ஏழாம் கட்ட தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி இப்போது எம்எல்ஏவாக இருக்கும் பவானிபூா் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

அந்த தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா் சோபன்தேவ் சட்டோபாத்யாய, பாஜக சாா்பில் நடிகா் ருத்ரனீல் கோஷ் போட்டியிடுகின்றனா். மம்தா பானா்ஜி இந்த முறை நந்திகிராமில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியை எதிா்த்துப் போட்டியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT