இந்தியா

93ஆவது ஆஸ்கர் விருதுகள்: நோமேட்லேண்ட் படத்துக்கு 3 விருதுகள் 

26th Apr 2021 09:12 AM

ADVERTISEMENT

சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய நோமேட்லேண்ட் படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் காரணமாக விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் வழக்கமாக பிரமாண்ட முறையில் இல்லாமல் எளிய முறையில் விழா நடைபெற்று வருகிறது. 
இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு துவங்கிய இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
அதில், சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய நோமேட்லேண்ட் படம் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் நோமேட்லேண்ட் படம் விருதுகளை வென்றது. 
மேலும் சிறந்த நடிகருக்கான விருதை தி ஃபாதர் படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸும், சிறந்த நடிகைக்கான விருதை நோமேட்லேண்ட் படத்தில் நடித்த பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் பெற்றனர். அதேசமயம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் பெற்றது.

Tags : oscar award
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT