இந்தியா

நாடு முழுவதும் ஒரேநாளில் 3.50 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

26th Apr 2021 10:20 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3,52,991 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரேநாளில் 3,52,991 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், ஒரேநாளில் 2812 போ் உயிரிழந்துள்ளனா். 
இந்த உயிரிழப்புகளையும் சோ்த்து கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,95,123 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,73,13,163 ஆக உயா்ந்துள்ளது. தற்போது கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,13,658 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து  ஒரேநாளில் 2,19,272 குணமடைந்தனர். 
இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 1,43,04,382 ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி வரை 27,93,21,177 பேரின் சளி மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டன. 
நேற்று ஒரேநாளில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 14,02,367 ஆகும். நாடுமுழுவதும் இதுவரை 14,19,11,223 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT