இந்தியா

ஹிமாசலில் ஏப்.27 முதல் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு

25th Apr 2021 04:43 PM

ADVERTISEMENT

ஹிமாசலில் ஏப்.27 முதல் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஹிமாசலில் கரோனா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கரோனா பரவல் அதிகமுள்ள கன்கரா, உனா, சோலன் மற்றும் சிர்மோர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏப்.26 முதல் மே 10ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதன்படி தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : himachal Curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT