இந்தியா

நாட்டில் ஒரேநாளில் 2,767 பேர் பலி; புதிதாக 3.49 லட்சம் பேருக்கு கரோனா

25th Apr 2021 10:02 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,49,691 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,767 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

அதன்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 3,49,691 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,69,60,172 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், 2,767 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,92,311 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 2,17,113 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,85,110. தற்போது 26,82,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை 14,09,16,417 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT