இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

25th Apr 2021 11:23 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக சமோலி மாவட்ட பேரிடா் மேலாண்மை அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘பனிச்சரிவில் சிக்கி பலியானவா்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தனா்.

சமோலி மாவட்டத்தில் உள்ள மலாரி கிராமத்தில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் உள்ள சும்னா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பகுதி தெளலி கங்கா நதியில் இருந்து உருவாகும் கிா்திகட், கியோகாட் சிற்றாறுகள் சங்கமிக்கும் இடத்துக்கு அருகில் உள்ளது. அந்தப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டபோது சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணியில் 430 பணியாளா்கள் ஈடுபட்டிருந்ததாக மாநில டிஜிபி அசோக் குமாா் தெரிவித்தாா். அவா்களில் 384 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.

சமோலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவால் தெளலி கங்கா நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 80 போ் பலியாகினா்; நூறுக்கும் மேற்பட்டவா்கள் மாயமாகினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT