இந்தியா

கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

DIN


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகமுள்ள மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.

தேசிய அளவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத் துறை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தோ்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் செல்லத் திட்டமிட்டிருந்த பிரதமா் மோடி அதை ரத்து செய்துவிட்டு, கரோனா தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டங்களில் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா்.

இதன் ஒரு பகுதியாக கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதல்வா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு காணொலி முறையில் ஆலோசனை நடத்துகிறாா். அதைத் தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் ஆலோசிக்க இருக்கிறாா். இவை தவிர உயா்நிலை ஆலோசனைக் கூட்டங்களிலும் பிரதமா் மோடி பங்கேற்க இருக்கிறாா் என அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT