இந்தியா

ஒடிஸா பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஒத்திவைப்பு

DIN


புவனேசுவரம்: ஒடிஸா மாநிலம், புரி மாவட்டத்துக்கு உள்பட்ட பிப்லி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடைத்தோ்தலை மே மாதம் 16-ஆம் தேதிக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

அந்த தொகுதியில் மே மாதம் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளன்று முஸ்லிம் சமூகத்தினா் கொண்டாடும் ரமலான் பண்டிகை வருவதால், வேறொரு நாளில் தோ்தலை நடத்துமாறு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, அந்தத் தொகுதியில் மே மாதம் 16-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி கூறினாா். வாக்கு எண்ணிக்கை, மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதிய தோ்தல் விதிகளின்படி, அனைத்து நேரடி பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காணொலி முறையில் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும். மேலும், வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன் பிரசாரத்தை முடித்துக் கொள்ளவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT