இந்தியா

கரோனா பரவல்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை (ஏப்.23) ஆலோசனை

22nd Apr 2021 06:46 PM

ADVERTISEMENT

அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன. 

இந்நிலையில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 23) ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆலோசனைக்கூட்டதில் கரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : coronavirus Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT