இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை: உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DIN

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பல்வேறு துறைகளின் உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும்  நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாநில அரசுகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடையின்றி ஆக்சிஜனை விநியோகம் செய்வது மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT