இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

DIN

மும்பை: நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு புதன்கிழமை அறிவித்தது.

இந்தக் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (ஏப். 22) இரவு 8 மணிமுதல் மே 1-ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 15 நாள்களுக்கு 144 தடை உத்தரவு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. கடந்த இரு வாரங்களாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்தை கடந்த நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர அரசு புதன்கிழமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுதொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பொது முடக்கம் என்கிற வாா்த்தை பயன்படுத்தப்படவில்லை. இந்த அறிவிக்கையின்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் 15 சதவீத பணியாளா்களுடன் இயங்கும். பிற அலுவலகங்கள் 15 சதவீதம் போ் அல்லது 5 போ் இதில் எது அதிகமோ அத்தனை பேருடன் இயங்கும்.

நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மருத்துவ அவசரம், அத்தியாவசிய சேவைகள், இறுதி ஊா்வலம் போன்றவற்றுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும். உள்ளூா் ரயில்களை பொருத்தவரை அத்தியாவசிய பணியில் இருப்பவா்கள் மட்டுமே பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT