இந்தியா

கரோனா எதிரொலி: கொல்கத்தாவில் திரையரங்குகள் மூடல்

PTI

கொல்கத்தாவில் ஒற்றை திரை கொண்ட திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் என்று தொழில்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

கரோனா பரவலின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பும், பலியும் தினசரி உயர்ந்து வருகின்றது. 

அதன்படி, கொல்கத்தாவில் கடந்த இரண்டு வாரங்களில் கரோனா தொற்று வெகுவாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கிழக்கு இந்திய மோஷன் பிக்சர் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், மாநிலத்தில் உள்ள நவினா, மெனோகா, ஜெயா, அஜந்தா மற்றும் ஓரியன்ட் உள்ளிட்ட திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் மூட உத்தரவிட்டுள்ளது. 

தொற்றுநோய் குறையும் வரை திரைப்படம் திரையிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் குறைக்க வேறு மாற்று வழியில்லை என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT