இந்தியா

கர்நாடகத்தில் நிலைமை கை மீறி சென்றுவிட்டது: முதல்வர் எடியூரப்பா

DIN

கர்நாடகத்தில் நிலைமை கை மீறி சென்றுவிட்டது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடியூரப்பா கடந்த 18-ம் தேதி இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 
இதனிடையே இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், கர்நாடகத்தில் கரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. நிலைமை கை மீறி சென்றுவிட்டது. பொதுமக்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். 
தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கரோனாவுக்கு ஒரே தீர்வு முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி உள்ளிட்டவையே. இதை தவிர வேறு வழியில்லை என்றார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 25,795 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 25,795 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,47,997-ஆக உயா்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 1,96,236 சிகிச்யில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 123 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 13,885ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 5,624 பேர் குணமடைந்தனர். இதுவரை 10,37,857 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT