இந்தியா

ஆக்சிஜன் பெறுவதைத் தடுக்கும் ஹரியாணா, உ.பி. அதிகாரிகள்: தில்லி துணை முதல்வர்

22nd Apr 2021 06:06 PM

ADVERTISEMENT

ஆக்சிஜன் ஏற்றி வரும் கண்டெய்னர் வாகனங்களை தடுத்தி நிறுத்தி உ.பி. மற்றும் ஹரியாணா மாநில அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாக தில்லி துணை முதல்வர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

தில்லி மருத்துவமனைகளில் கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையொட்டி கரோனாவால் பாதிக்கப்பட்டவகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் தில்லி அரசு திணறி வருகிறது. 

உடனடியாக மத்திய அரசு உதவ வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரியிருந்த நிலையில் தில்லிக்கான ஆக்சிஜன் அளவை அதிகரித்து மத்திய அரசு அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க ஒடிசாவிலிருந்து கண்டெய்னர் வாகனங்கள் மூலம் ஆக்சிஜன் தில்லிக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆக்சிஜனைக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை எனும் பெயரில் தடுத்தி நிறுத்தி ஆக்சிஜன் பெறுவதைத் தாமதப்படுத்தி வருவதாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில அதிகாரிகள் மீது தில்லி துணை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தில்லி துணை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரியுள்ளார்.

Tags : Delhi oxygen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT