இந்தியா

கரோனா பரவலுக்கு மத்தியிலும் தில்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம்!

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் 140 நாள்களைக் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கரோனா பரவல், ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 146 ஆவது நாளை எட்டியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாமல் நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார். 

'நாங்கள் எங்களுடைய வீட்டில் தான் இருக்கிறோம். கடந்த 5 மாதங்களாக இங்குதான் இருக்கிறோம். இப்போது இது எங்கள் வீடு. இதுவரை இங்கு யாருக்காவது கரோனா வந்ததா? வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை இங்குதான் இருப்போம்' என்று கூறியுள்ளார். 

மேலும், இங்குள்ள விவசாயிகள் பலரும் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இரண்டாவது டோஸ் போட தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு முகாம் அமைத்து தடுப்பூசி போட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இங்கு அனைவரும் சமூக இடைவெளியுடன் தான் இருக்கிறோம். யாரும் கைகொடுப்பதில்லை. முறையாக கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறோம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT