இந்தியா

மேற்கு வங்கத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்

22nd Apr 2021 08:02 PM

ADVERTISEMENT

மே 5 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை பேசிய திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “மாநில அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும்." எனத் தெரிவித்தார். 

மே 5ஆம் தேதி முதல் 18 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இதன்மூலம் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் 6ஆவது மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus covid19 Trinamool
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT