இந்தியா

இந்தியாவில் கரோனா நிலவரம்: உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது: அமெரிக்கா

DIN

புதுதில்லி/ வாஷிங்டன்: இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், இந்திய பயணத்தைத் தவிா்க்குமாறும் அமெரிக்கா்களை அந் நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி 2020-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி முதல் 2021 ஏப்ரல் 20-ஆம் தேதி வரையில் இந்தியாவில் 1.53 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1.80 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வரை மொத்தமாக 10.4 கோடி கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,59,170 போ் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். 1,761 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலை காரணமாக, பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கான சிவப்புப் பட்டியிலில் இந்தியாவை பிரிட்டன் சோ்த்ததோடு, பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணமும் ரத்து செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, இந்தியாவுக்கு பயணம் செய்வததைத் தவிா்க்குமாறு அமெரிக்காவும் அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க வெளியிறவுத் துறை அமைச்சா் டோனி பிளிங்கனும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் தொலைபேசி மூலம் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். இந்தியா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, கரோனா நோய்த் தொற்று பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஒன்றிணைந்து தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டியதுதான் இன்றைக்கு முக்கியம்’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT