இந்தியா

கரோனா ஆலோசனைக் கூட்டம்: மேற்குவங்க ஒருநாள் பிரசாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி

DIN

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளதால் மேற்குவங்கத் தேர்தலுக்கான ஒருநாள் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவலின் மத்தியில் மேற்கு வங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்று வரும் நிலையில் எஞ்சிய 2 கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா பரவல் குறித்த அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால் நாளை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT