இந்தியா

கரோனாவுக்கு எதிரான போரில் துணை நின்ற குடிமைப் பணி அதிகாரிகள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

DIN

புது தில்லி: ‘கரோனாவுக்கு எதிரான போரில் துணைநின்றவா்கள் குடிமைப்பணி அதிகாரிகள்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குடிமைப் பணிகள் தின வாழ்த்தைத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 1947-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபாய் படேல், பயிற்சி முடித்த இந்திய நிா்வாகப் பணி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஏப்ரல் 21-ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடிமைப் பணி அதிகாரிகள் தினமாக கடைப்படிக்கப்படுகிறது. அன்றைய உரையின்போது, குடிமைப் பணி அதிகாரிகளை ‘இந்தியாவின் இரும்புச் சட்டம்’ என்று சா்தாா் படேல் குறிப்பிட்டாா்.

குடிமைப் பணி அதிகாரிகள் தங்களுடைய பணியில் சிறந்து விளங்கவும், பொதுச் சேவைக்கான தங்களுடைய கடமையை புதுப்பித்துக்கொள்ளவும் உதவும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு குடிமைப் பணி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தனது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை புதன்கிழமை பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

நமது குடிமைப் பணி அதிகாரிகள் மிகச் சரியாக ‘இரும்பச் சட்டம்’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றனா். ஏனெனில், கரோனாவுக்கு எதிரான போரில் இந்த அதிகாரிகள் பின்புலமாக திகழ்ந்தனா். கடமையையும், பொதுச் சேவையை அா்ப்பணிப்பு உணா்வுடன் செய்திருக்கிறீா்கள். வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அதுபோல, மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்தா் சிங்கும் குடிமைப் பணிகள் தின வாழ்த்தைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT