இந்தியா

சமூக இடைவெளியுடன் வேளாண் போராட்டம்: விவசாய சங்கங்கள்

DIN

ஒருவரை ஒருவர் தொடாமல் சமூக இடைவெளியுடன் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, அரசு அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியுடன் விவசாயிகள் அமந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 50 நபர்களுக்கு மிகாமல் கூடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இங்கு போராட்டக்களத்தில் 22 - 35 நபர்கள் மட்டுமே உள்ளனர். யாரும் யாருடனும் சந்தித்து பேசுவதில்லை. யாரும் கைகளைக் குலுக்கிக்கொள்வதில்லை. மற்றவரைத் தொட்டு ஆறுதல் சொல்வதில்லை என்று தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 147-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT