இந்தியா

இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி: மத்திய அரசு

DIN

புது தில்லி: இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டுக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்தனா். அப்போது சுகாதாரச் செயலா் ராஜேஷ் பூஷண் கூறியது:

தொழில் துறைகளில் 9 துறைகளைத் தவிர இதர துறைகளின் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் விநியோகிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவப் பயன்பாட்டுக்கு கூடுதலாக ஆக்சிஜன் விநியோகிக்க முடியும்.

இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டுக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆக்சிஜனை கொண்டுவருவதில் ஏற்படும் இடா்ப்பாடுகள் குறித்து மாநில அரசுகள் தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கு வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தா்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தாா்.

‘கரோனா சிகிச்சையின்போது சரியான முறையில் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதை மாநில அரசுகள், மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால் கேட்டுக்கொண்டாா்.

ரெம்டெசிவிா் உற்பத்தி அதிகரிப்பு: கரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிா் மருந்தின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மாதந்தோறும் 38 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை மாதந்தோறும் 74 லட்சம் குப்பிகளாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT