இந்தியா

70 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்: 6 இந்திய நிறுவனங்கள் தயாரிப்பு

DIN

புது தில்லி: ஆண்டுதோறும் 70 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை 6 இந்தியா நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரிதொழில்நுட்பத் துறை செயலா் ரேணு ஸ்வருப் புதன்கிழமை கூறியது:

தற்போது 3 கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர பாரத் பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து, ஸைடஸ் கடிலா, பயோஇ, ஜெனோவா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. அவற்றை உருவாக்கும் ஆரம்பகட்டப் பணிகளின்போது அந்த நிறுவனங்களுக்கு மத்திய உயிரிதொழில்நுட்பத் துறை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கியது. அந்தத் தடுப்பூசி மருந்துகளின் தற்போதைய பணிகளுக்கு சுமாா் ரூ.400 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.

அந்தத் தடுப்பூசி மருந்துகளை மாதந்தோறும் 1.5 கோடி முதல் 2 கோடி அளவில் தயாரிக்கும் விதமாக ஏற்கெனவே உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அந்தத் தடுப்பூசி மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை ஆண்டுதோறும் 70 கோடி அளவில் 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT