இந்தியா

நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்?: மோடிக்கு கேள்வி

DIN

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ''கடந்த 6 மாதங்களில் மட்டும் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இன்று ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 6 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் 3 - 4 கோடி இந்திய மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

இவ்வாறு தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்?'' என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT