இந்தியா

கோவாவின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் ஜுவர்கர் கரோனாவுக்கு பலி

21st Apr 2021 11:24 AM

ADVERTISEMENT

 

கோவாவின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் ஜுவர்கர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுக்கு உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

அவருக்கு வயது 74. ஜுவர்கர் கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதன்பின்னர் இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று இரவு அவரது உயிர் பிரிந்தது. 

காங்கிரஸ் கட்சியில் 1989 முதல் 2002 வரை பனாஜிக்கு அருகிலுள்ள தலீகாவோ சட்டமன்றத் தொகுதியில் இருந்தவர். 

ADVERTISEMENT

பிரதாப்சிங் ரானே மற்றும் ஃபிரான்சிகோ சர்தினா தலைமையிலான அரசில் சிவில், ஒத்துழைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சராக ஜுவர்கர் பணியாற்றினார்.

கோவாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஸ்ரீ சோம்நாத் ஜுவர்கர் காலமானது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் சுட்டுரையில் செய்துள்ளார்.
 

Tags : dies coronavirus Goa Ex-minister  Somnath Juwarkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT