இந்தியா

நாடு முழுவதும் ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு கரோனா: 1,761 பேர் உயிரிழப்பு

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் ஒரே நாளில்  2,59,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 2,59,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,530-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 41-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,31,977-ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 13.26 சதவீதம் ஆகும்.
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,31,08,582-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா மொத்த இறப்பு விகிதம் குறைந்து 1.18 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலவாரியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...: மகாராஷ்டிரத்தில் 351, தில்லியில் 240, சத்தீஸ்கரில் 175, உத்தர பிரதேசத்தில் 167, கர்நாடகத்தில் 146, குஜராத்தில் 117, பஞ்சாபில் 83, மத்திய பிரதேசத்தில் 79, ராஜஸ்தானில் 53, ஜார்க்கண்ட்டில் 46, தமிழகத்தில் 44, பிகாரில் 41, மேற்கு வங்கத்தில் 38, ஹரியாணாவில் 33 பேர் உள்பட ஒரே நாளில் 1,716 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக இதுவரையில் மகாராஷ்டிரத்தில் 60,824 பேரும், கர்நாடகத்தில் 13,497 பேரும், தமிழகத்தில் 13,157 பேரும், தில்லியில் 12,361 பேரும் என  நாடு முழுவதும் இதுவரை 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 மாநிலங்களில் 77 சதவீதம் பேர் பாதிப்பு: புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 77.67 சதவீதமாக உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துவிட்டது. மொத்தம் 12,71,29,113 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  அதில் 10,96,59,181 பேருக்கு முதல் டோஸôகவும், 1,74,69,932 பேருக்கு இரண்டாவது டோஸôகவும் செலுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தரவுகளின்படி, ஏப்ரல் 19-ஆம் தேதி வரை 26, 94,14,035 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
திங்கள்கிழமை ஒரே நாளில் 15,19,486 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT