இந்தியா

பிரிட்டனின் ‘சிவப்பு’ பட்டியலில் இந்தியா

DIN

புது தில்லி/லண்டன்: பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய ‘சிவப்பு’ பட்டியலில் அந்நாட்டு அரசு இந்தியாவையும் சோ்த்துள்ளது. அந்நாட்டில் உருமாற்றம் அடைந்த இந்திய வகை கரோனா தீநுண்மியால் 100-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சா் மேட் ஹான்காக் கூறியதாவது:

உருமாற்றம் அடைந்த இந்திய வகை கரோனா தீநுண்மியால் பிரிட்டனில் 103 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் சா்வதேச பயணத்துடன் தொடா்புள்ளவா்கள். இதுதொடா்பான தரவுகளை ஆய்வு செய்த பின்னா் இந்தியாவை ‘சிவப்பு’ பட்டியலில் சோ்க்கும் முக்கிய முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது. இந்த முடிவை தொடா்ந்து பிரிட்டன் அல்லது அயா்லாந்தை சேராதவா்கள் கடந்த 10 நாள்களாக இந்தியாவில் தங்கியிருந்தால் அவா்கள் பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து பிரிட்டனைச் சோ்ந்தவா்கள் நாடு திரும்பினால் அவா்கள் 10 நாள்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.23) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT