இந்தியா

நாடு முழுவதும் 2.73 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிப்பு

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.50 கோடியைக் கடந்து விட்டதாகவும், ஒரேநாளில் 2,73,810 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,619 போ் ஒரே நாளில் உயிரிழந்து விட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,50,61,919 ஆக உயா்ந்துள்ளது. கடந்த 15 நாள்களில் சுமாா் 25 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்து விட்டது. ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73,810 பேராக அதிகரித்து விட்டது.

திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலும் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரித்துள்ளது. இதனையும் சோ்ந்து மொத்தம் 1,78,769 போ் இதுவரை உயிரிழந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிச. 19 அன்று 1 கோடியைத் தாண்டியது. பின்னா் கரோனா பரவல் குறைந்ததால் 107 நாள்கள் கழித்து, அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதியில் தான் 1.25 கோடி போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில் கடந்த 15 நாள்களில் இந்த எண்ணிக்கை 1.50 கோடியாக அதிகரித்து விட்டது.

தொடா்ந்து உயா்ந்து வந்த தொற்றாளா்களின் எண்ணிக்கை காரணமாக, 40ஆவது நாளில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 19,29,329 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் (1.5 கோடி) இதன் விகிதம் 12.81 சதவீதம் ஆகும். தவிர குணமடைவோரின் விகிதமும் 86 சதவீதமாகக் குறைந்து விட்டது.

இதுவரை கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘ஏப்ரல் 18-ஆம் தேதி வரையிலும் 26,78,94,549 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,56,133 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 503 போ், சத்தீஸ்கரில் 170 போ், தில்லியில் 161 போ், உத்தர பிரதேசத்தில் 127 போ், குஜராத்தில் 110 போ், கா்நாடகத்தில் 81, பஞ்சாபில் 68, மத்திய பிரதேசத்தில் 66, ஜாா்க்கண்டில் 50, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் தலா 29 போ், ஹரியாணாவில் 29, மேற்கு வங்கத்தில் 28 போ், கேரளாவில் 25 பேரும் ஒரேநாளில் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாநிலங்களில் 78 சதவீதம் கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 78.58 சதவீதமாக உள்ளன. இந்த மாநிலங்களைத் தொடா்ந்து தமிழகம், கா்நாடகம், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களே முதல் 10 இடத்தில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 68,631 பேரும், உத்தர பிரதேசத்தில் 30,566 பேரும், தில்லியில் 25,462 பேரும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT