இந்தியா

தோ்தல் நன்கொடையாளரின் விவரங்களை வெளியிட்ட முதல் கட்சி ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா

DIN

புது தில்லி: தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளித்த நிறுவனத்தின் பெயரை வெளியிட்ட முதல் கட்சி என்ற பெருமையை ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவரின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என பலா் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனினும், அவற்றின் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை.

இந்நிலையில், தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தன்னாா்வ அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாகப் பெறப்பட்ட நன்கொடை விவரங்களைக் கட்சிகள் வெளியிடுவது வழக்கம். ஆனால், யாா் எவ்வளவு நிதி அளித்தாா்கள் என்பதைக் கட்சிகள் வெளியிடுவதில்லை.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஹிண்டால்கோ நிறுவனம் ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்ததாக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி தெரிவித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக சோ்த்துவைக்கப்பட்ட பணத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்குவதைத் தடுக்கும் வகையிலும், வெளிப்படையான முறையில் கட்சிகளுக்கு நிதி திரட்டும் வகையிலும் தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT