இந்தியா

கரோனா தடுப்பூசி உற்பத்தியாளா்களுடன்பிரதமா் மோடி இன்று ஆலோசனை

DIN

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி கரோனா தடுப்பூசி உற்பத்தியாளா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்தது. இந்நிலையில் பிரதமா் மோடி கரோனா தடுப்பூசி உற்பத்தியாளா்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி வழியாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள கரோனா தடுப்பூசிகளை தயாரித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT