இந்தியா

கரோனா ஊரடங்கு: ஆன்லைன் தரிசன டிக்கெட் காலகெடு 90 நாள் வரை நீட்டிப்பு

DIN

திருப்பதி: ஏழுமலையான் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு 90 நாள்கள் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கரோனா 2-ஆம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தா்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

எனவே, ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்கள் கரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவா்கள் 90 நாள்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் காய்ச்சல், சளி, இருமல். உடல் வலி உள்ளவா்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT