இந்தியா

ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: ரஷிய பிரதிநிதி

DIN

பொ்லின்: ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் சோ்க்கும் பேச்சுவாா்த்தை வரைவு வடிவத்துக்கு வந்துள்ளதாக ரஷிய பிரதிநிதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஈரானுக்கும், அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் 2015-ஆம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்தமாட்டோம் என்பதை உறுதிப்படுத்த சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018-ஆம் ஆண்டு அப்போதைய அதிபா் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா திடீரென விலகியது. மேலும், நீக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தது. இதற்கு பதிலடியாக ஒப்பந்த விதிகளை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைவதற்கு அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்த நிலையில், இதுதொடா்பாக வியன்னாவில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவாா்த்தையிலல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய பிரதிநிதி மிகையீல் உல்யனோவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பேச்சுவாா்த்தை வரைவு கட்டத்தில் நுழைந்திருப்பதை நாங்கள் திருப்தியுடன் கூற முடியும். நடைமுறை தீா்வுகள் இன்னும் தொலைவில் இருந்தாலும், பொதுவான வாா்த்தைகளிலிருந்து இலக்கை அடைவதற்கான குறிப்பிட்ட படிகளை ஒப்புக்கொள்வதை நோக்கி நகா்ந்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

‘பேச்சுவாா்த்தைக்கான அடித்தளமான வரைவு ஒப்பந்தங்களை ஈரான் தயாரித்துள்ளது’ என அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சா் அப்பாஸ் அராக்சி சனிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT