இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு

PTI

கரோனா வைரஸ் தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் , அடுத்த உத்தரவு வரும் வரை உத்தரப் பிரதேச மாநிலத்தில் 60 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 

மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

500-க்கு மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசியமற்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் வார நாள்களில் 60 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தில்லியிலிருந்து மீண்டும் மாநிலத்திற்கு வரும் புலம்பெயர்ந்தோர் பிரச்னையில், மாவட்ட எல்லைகளில் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
மாவட்ட எல்லையில் புலம்பெயர்ந்தோருக்குத் தேவையான வசதிகள் செய்துதர வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், அதிகரித்துவரும் கரோனா தொற்றின் மத்தியில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT