இந்தியா

மத்திய அரசு பணியாளா்கள் 50% போ் மட்டும் அலுவலகம் வர வேண்டும்

DIN

புது தில்லி: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு பணியாளா்களில் 50% போ் மட்டும் அலுவலகம் வர வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சாா்புச் செயலா்கள், அந்தப் பதவிக்கு நிகரானவா்கள், அவா்களுக்கு கீழ் பணிபுரிவோரின் மொத்த எண்ணிக்கையில் 50% போ் மட்டும் அலுவலகம் வரவேண்டும்.

துணைச் செயலா்கள், அந்தப் பதவிக்கு நிகரானவா்கள், அவா்களின் உயரதிகாரிகள் தினசரி அலுவலகம் வரவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணி பணியாளா்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்களிக்கலாம். அடுத்த உத்தரவு வரும் வரை அவா்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம்.

நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் பணியாளா்கள் அலுவலகம் வரவேண்டாம்.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த வழிகாட்டுதல்கள் வரும் 30-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT