இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு

PTI

கரோனா வைரஸ் தொற்று கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்து அம்மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் சுட்டுரை பதிவில் அறிவித்தது..

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களின் நகராட்சி மற்றும் உள்ளூர் நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக எட்டு மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. தற்போது இந்த இரவு முடக்கத்தை மேலும் நீட்டித்துள்ளது. 

மேலும், பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சந்தைகள், பஜார், மால்களில் 50 சதவீத கடைகள் மட்டும் சுழற்சி முறையில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டுரையில் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT