இந்தியா

இந்தியப் பயணத்தைத் தவிருங்கள்: அமெரிக்கர்களுக்கு அறிவுரை

DIN


வாஷிங்டன்: கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியப் பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் தற்போது கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே, கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட, இந்தியாவுக்குச் செல்லும் போது கரோனா தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு வேளை கட்டாயம் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்துக்கு முன்பு, முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், கையை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதும் நல்லது என்று தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் போது, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் அமெரிக்காவில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமில்லை. ஆனால், நீங்கள் சென்று சேரும் இடத்தில் பரிசோதனை சான்றிதழ் தேவை என்றால் எடுத்துக் கொள்ளலாம், அதுபோலவே, அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT