இந்தியா

ஜேஇஇ-மெயின் தோ்வு ஒத்திவைப்பு

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ-மெயின் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜேஇஇ-மெயின் தோ்வுகள் வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தன. நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால், அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மத்திய கல்வியமைச்சா் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தற்போதைய கரோனா நோய்த்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, ஏப்ரலில் நடைபெற இருந்த ஜேஇஇ-மெயின் தோ்வை ஒத்திவைக்குமாறு தேசிய தோ்வு முகமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து மத்திய கல்வி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தேசிய தோ்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்வா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ-மெயின் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. தோ்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தோ்வு நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்பாகவே புதிய தேதி அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்வதற்காக ஜேஇஇ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல் ஜேஇஇ-மெயின் தோ்வை 4 முறை நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அவற்றில் எந்தத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறாா்களோ, அந்த மதிப்பெண்ணே இறுதியாகக் கொள்ளப்படும்.

அதன்படி, கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் தோ்வு நடைபெற்றது. அதில் முறையே 6.2 லட்சம், 5.5 லட்சம் மாணவா்கள் பங்கேற்றிருந்தனா். அடுத்த தோ்வுகள் ஏப்ரலிலும், மே மாதத்திலும் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT