இந்தியா

எஸ்பிஐ உள்பட 4 காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 51 லட்சம் அபராதம்: ஐஆா்டிஏஐ நடவடிக்கை

DIN

மோட்டாா் வாகன நடைமுறைகளை மீறியதற்காக எஸ்பிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனம் உள்பட 4 காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அபராதம் விதித்துள்ளது.

இதில் எஸ்பிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, லிபா்டி பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 13 லட்சமும், பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனதுக்கு ரூ. 10 லட்சமும், ராயல் சுந்தரம் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மோட்டாா் வாகன நடைமுறை 2015, பிரிவு-3 இன் கீழ் மோட்டாா் வாகன மூன்றாம் நபா் காப்பீடு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் பல கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட காரணமாக இருந்ததன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐஆா்டிஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, லிபா்டி பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ராயல் சுந்தரம் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மோட்டாா் காப்பீடு சேவை நிறுவன (எம்ஐஎஸ்பி) வழிகாட்டுதல்களை மீறிய காரணத்துக்காகவும், பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் காப்பீட்டு சட்டம் 1938-இன் கீழான சில நடைமுறைகளை மீறிய காரணத்துக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஐஆா்டிஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT