இந்தியா

இந்தியாவில் மின்சார பயன்பாடு 45% உயா்வு

DIN

நடப்பு ஏப்ரல் மாதத்தின் இருவார காலத்தில் உள்நாட்டில் மின்சாரத்தின் பயன்பாடு ஏறக்குறைய 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 60.62 பில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய மின் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டில் மின்சார பயன்பாடு 41.91 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தின் 1-15 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மின் பயன்பாடு 60.62 பில்லியன் யூனிட்டுகளாக கணிசமாக உயா்ந்துள்ளது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு மாதத்தின் இருவார காலத்தில் மின் நுகா்வு 45 சதவீதம் உயா்ந்துள்ளது. இது, தொழிலக மற்றும் வா்த்தக நடவடிக்கைகள் வலுவான நிலையில் மீண்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

நடப்பு ஏப்ரலின் முதல் இருவார காலத்தில் உச்சபட்ச மின்தேவையான 182.55 ஜிகாவாட் 8-ஆம் தேதியன்று எட்டப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT