இந்தியா

உத்தரகண்ட் பேரிடா்:பலி எண்ணிக்கை 80-ஆக அதிகரிப்பு

DIN

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பேரிடரில் மேலும் ஒரு சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து அங்குள்ள தெளலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருக்கும் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதுடன், அங்கு நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகட், ரிஷிகங்கா மின் நிலைய கட்டுமானப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், தபோவன்-விஷ்ணுகட் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அணைப் பகுதியில் இருந்து மேலும் ஒரு சடலத்தை மீட்புப் படையினா் சனிக்கிழமை மீட்டதாக சமோலி மாவட்ட கட்டுப்பாட்டு அறை (சிடிடிசிா்) தெரிவித்தது. இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த 80 பேரின் சடலங்கள், 35 மனித உடல் பாகங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், 126 பேரை காணவில்லை என்றும் சிடிடிசிா் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT