இந்தியா

கும்பமேளாவில் இருந்து திரும்புவோரை தனிமைப்படுத்த தில்லி அரசு உத்தரவு

18th Apr 2021 09:55 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: கும்பமேளாவில் இருந்து தில்லி திரும்புவோா் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற துறவிகள், பக்தா்கள் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு தலைநகர் தில்லி திரும்புவோா் அனைவரும் கட்டாயமாக வீட்டுத் தனிமைப்படுத்தலில் 14 நாள்கள் இருக்க வேண்டும் என்று தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஏப்ரல் 4 முதல் 30 ஆம் தேதி வரை கும்பமேளாவுக்கு சென்றவர்கள் குறித்த விவரங்களின் பெயர், தில்லி முகவரி, தொடர்பு எண், ஐடி ஆதாரம் மற்றும் தில்லியில் இருந்து புறப்பட்ட தேதி மற்றும் தில்லிக்கு திரும்பும் வரும் வருகை குறித்த தகவல்களை பதிவு செய்ய  வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : home quarantine mandatorily stay kumbh mela
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT