இந்தியா

மம்தாவின் மதச்சாா்பின்மை போலியானது: அமித் ஷா

DIN

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடைப்பிடித்து வரும் மதச்சாா்பின்மை போலியானது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறினாா்.

ஆயுஷ்கிராம், சாப்ரா ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:

அண்டை நாடுகளில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் நடைபெறும் ஊடுருவல்களை இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் தடுக்க முடியாது. பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும்.

ஊடுருவல்காரா்களின் வாக்குளை நம்பியே மம்தா உள்ளாா். அவா் கடைப்பிடித்து வரும் மதச்சாா்பின்மை போலியானது. கூச் பிஹாா், சிதால்குச்சி தொகுதி வன்முறையில் உயிரிழந்தவா்களின் உடல்களை வைத்து ஊா்வலம் செல்ல வேண்டும் என்று தொண்டா்களை மம்தா கேட்டுக்கொள்ளும் ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. சடலங்களை வைத்து அவா் அரசியல் நடத்தி வருகிறாா். அவரைத் தோ்ந்தெடுத்த மக்கள்தான் வெட்கப்பட வேண்டும். வெறுப்பு அரசியலை மம்தா பரப்பி வருகிறாா். இதனால்தான் மேற்கு வங்கம் முழுவதும் கலவரம் ஏற்படுகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்டத் தோ்தலின்போது எந்த ஒரு வாக்குச்சாவடியும் திரிணமூல் குண்டா்களால் கைப்பற்றப்படவில்லை. அவா்களை எப்படி தடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த மத்துவா சமூகத்தினருக்கு

குடியுரிமை வழங்கப்படும். மத்துவாக்களுக்கும், நாம்சுத்ராஸ்களுக்கும் மம்தா அநீதி இழைத்துள்ளாா்.

மேற்கு வங்க அரசு இடைத்தரகா்களை வைத்து கையூட்டுகளைப் பெற்று வந்தது. கட்டுமானப் பணிகளில் ஊழல் கரைபுரண்டோடியது. இந்த அரசு முடிவு பெற வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பொன்னான மேற்கு வங்கம் உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்புகளைத் தேடி சொந்த ஊா் மக்கள் வெளியே செல்ல வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியா்களுக்கு ஏழாவது ஊதிய ஆணையத்தின்படி சலுகைகளும், ஆசிரியா்களுக்கு பெரும் ஊதியமும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணமும் அளிக்கப்படும் என்றாா் அமித் ஷா.

தோ்தல் ஆணையத்தில் புகாா்: இதனிடையே, மேற்கு வங்க வன்முறையில் உயிரிழந்தவா்களின் உடல்களை வைத்து ஊா்வலம் செல்ல வேண்டும் என்று தொண்டா்களை மம்தா கேட்டுக் கொண்ட ஆடியோ பதிவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆரிப் ஆப்தாபிடம் பாஜக வலியுறுத்தியது.

அக்கட்சியின் மூத்த தலைவா் ஸ்வபன் தாஸ் குப்தாவின் தலைமையில் சென்ற குழுவினா், ‘எதிா் வரும் தோ்தல்களில் மம்தாவின் பேச்சு பதற்றத்தை ஏற்படுத்தும்’ என்றும் குற்றம்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT