இந்தியா

பெரிய நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

DIN

கரோனா பரவல் அதிகரித்துள்ள தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் பெரிய நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் கூறியதாவது:

தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதற்கு பெரிய அளவில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும். இந்த மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் பதிவாகும் 5 முதல் 6 முக்கிய நகரங்கள் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7.6% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5.5%-ஆக இருந்தது. தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் தற்போது 10.2%-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை மாநிலங்களுக்கு 14.15 கோடி கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 12.57 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. அதில் வீணாண தடுப்பூசிகளும் அடங்கும். எஞ்சிய 1.58 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ளன. எனவே கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை.

அடுத்த 2 வாரங்களுக்குள் 1.16 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT