இந்தியா

கும்பமேளாவுக்கு வந்த அகாரா அமைப்புத் தலைவர் கரோனாவுக்கு பலி

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மகா நிர்வாணி அகாரா அமைப்புத் தலைவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த அகாரா அமைப்புத் தலைவர் கபில் தேவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு உத்தரகண்ட் மாநிலம் டேஹ்ராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக டேஹ்ராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் சரிதா தோபல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அகில பாரதிய அகாடா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரிக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை கடும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரித்வாரில் கும்ப மேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

கும்பமேளா தொடங்கி கடந்த 5 நாள்களில் மட்டும் ஹரித்வாரைச் சேர்ந்த 2,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் 30 சாதுக்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹரித்வாரைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படும்போது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். 

இதற்கிடையே, மத்தியப் பிரதேச மாநிலம் சித்திரக்கூடத்திலிருந்து ஹரித்வாரில் நடைபெறும் கும்ப மேளாவில் பங்கேற்க வந்த மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ், கரோனா பாதித்து டேஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்து நாள்களில் சுமார் 48.51 லட்சம் பேர் கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடியிருப்பார்கள் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு நாளில் புனித நீராட லட்சக்கணக்கானோர் ஹரித்வாரில் குவிந்து வருகிறார்கள்.

ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கும்ப மேளாவை, முன்கூட்டியே முடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT